தேவாலயத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள்
தேவாலயத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள்

தேவாலயத்துக்குள் கொள்ளை கும்பல் புகுந்ததால் கூட்ட நெரிசல்- 29 பேர் பலி

தேவாலயத்திற்குள் கொள்ளைக்கும்பல் புகுந்ததைப் பார்த்த மக்கள் தப்பிக்க ஓடியதால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
Published on

மன்ரோவியா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு புகுந்துள்ளனர்.

இதை பார்த்ததும் தேவாலயத்தில் இருந்த மக்கள் தப்பிக்க ஓடினார்கள். இதனால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழேவிழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com