இலங்கைக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி: சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அரசு தீவிர பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.
இலங்கைக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி: சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது
Published on

கொழும்பு:

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. இதனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.

சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அதிபராக அனுரகுமார திசநாயக தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என புதிய அதிபர் அறிவித்திருந்தார். இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு சமீபத்தில் மதிப்பாய்வை முடித்து சென்றது.

இந்நிலையில், இலங்கைக்கு 4-வது தவணையாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.25,330கோடி) தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com