

தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான 'எஸ்கே குரூப்' அதிபர் சே டே-வோன். இவருக்கும், அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங்கிற்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு நடந்து வந்தது.
இந்த பரபரப்பான வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தொழிலதிபர் சே டே-வோன் தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6 ஆயிரத்து 200 கோடியை (944 பில்லியன் வான்) கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், இந்த முழு தொகையையும் ரொக்கமாகவே கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு கூறியுள்ளது.
சே டே-வோன் மற்றும் ரோ சோ-இயோங்
தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கில் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.