தென் கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய தயாராகும் காவல் துறை

சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார். யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.
தென் கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய தயாராகும் காவல் துறை
Published on

தென் கொரியா நாட்டில் பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.

இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனனர். மேலும், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியிலும் புலனாய்வு அதிகாரிகள் இறங்கினர்.

யூன் சுக் இயோல் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதாரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். யூன் சுக் இயோல் எந்நேரத்திலும், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், புலனாய்வு அதிகாரிகளின் கைது முயற்சி வெற்றிபெறவில்லை. இது தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

யூன் சுக் இயோலை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் தவறியதை அடுத்து, தென் கொரிய ஊழல் தடுப்பு துறையினர் காவல் துறை நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய ஊழல் தடுப்பு துறை மற்றும் காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான வாரண்ட் காலாவதியாக உள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்ய புதிய வாரண்ட் பிறப்பிக்க கோரி ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com