பூமியைத் தாக்கவிருக்கும் சூரியப் புயல்: இரவில் துருவ ஒளிகள் பிரகாசிக்கக்கூடும்!

இந்தியாவில் வலுவான புவிகாந்தப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அமைப்பான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
auroras visible over India tonight
auroras visible over India tonight
Published on

இந்தியாவில் இன்று இரவு வானில் ஒரு அசாதாரண நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஒரு மாபெரும் சூரியப் புயல் பூமியைத் தாக்கவிருக்கிறது. இதனால், வட துருவ ஒளிகள் நள்ளிரவில் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செயல்மிகு மண்டலம் 4461 எனப்படும் சூரிய மேற்பரப்பின் ஒரு பகுதி, M1.8 சூரியப் பிழம்பு என வகைப்படுத்தப்பட்ட ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது.

இது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் ஒரு தீவிரமான கதிர்வீச்சுப் பெருவெடிப்பு ஆகும். அடர்த்தியான, காந்தத்தன்மை கொண்ட இவ்வெடிப்பு நேராக பூமியை நோக்கிச் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

தற்போது வினாடிக்குச் சுமார் 1,400 கிலோமீட்டர் வேகத்தில் சூரிய மண்டலத்தின் உட்பகுதியைக் கடந்துள்ளது. இரண்டு நாட்களாகப் பயணித்து வரும் இது இன்று இரவு பூமியின் வளிமண்டலத்தை தாக்கவுள்ளது.

இதனைத்தொடர்ந்து வலுவான புவிகாந்தப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அமைப்பான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட துருவ ஒளி எனப் பரவலாக அறியப்படும் அரோராக்கள் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களின் மீது மின்னூட்டம் பெற்ற சூரியத் துகள்கள் மோதும் போது இரவு முழுவதும் வானம் பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிற ஒளி அலைகளை திரையிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியை பூமியின் உயர்மட்ட இடங்களில் காணலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com