கனடாவில் இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு.. நடுவில் சிக்கிய இந்திய மாணவி பரிதாப பலி

சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார்.இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
கனடாவில் இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு.. நடுவில் சிக்கிய இந்திய மாணவி பரிதாப பலி
Published on

கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (21 வயது) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.

உள்ளூர் நேரப்படி கடந்த புதன்கிழமை இரவு 7:30 மணியளவில், சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது, அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் ஹர்சிம்ரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com