என் மலர்
உலகம்

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு
- கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எல்கார்ட் நகரில் ஒரு வணிக வளாகம் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வாலிபர் ஒருவர் சென்றிருந்தனர்.
அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் கடைக்குள் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
அதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த வாலிபர் கொல்லப்பட்டார்.
Next Story






