சொர்க்கத்தில் நிலங்கள் விற்பனை?

சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
சொர்க்கத்தில் நிலங்கள் விற்பனை?
Published on

மெக்சிகோவில் உள்ள ஆலயத்தை சேர்ந்த போதகர் ஒருவர், சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்த போதகர் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

அப்போது சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய கடவுள் அவருக்கு அதிகாரம் அளித்ததாகவும், அவர் தெரிவித்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

இதன் அடிப்படையிலேயே அந்த தேவாலயத்தினர் சொர்க்கத்தில் நிலங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் குவிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

முதலில் இதை ஆலய நிர்வாகத்தினர் விளையாட்டாக தொடங்கியதாகவும், பின்னர் இதை சீரியசாக எடுத்துக்கொண்ட சிலர் மனைகளை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com