சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது - மகன் ஜாபர் ருஷ்டி

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மகன் ஜாபர் தெரிவித்தார்.
சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி
Published on

வாஷிங்டன்:

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75) மீது சமீபத்தில் முன்தினம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.

இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சல்மான் ருஷ்டியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவரது மகன் ஜாபர் ருஷ்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜாபர் வெலியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் கழற்றப்பட்டது. அவரால் சில வார்த்தைகளைப் பேச முடிந்தது. நாங்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளோம். உலகம் முழுவதிலும் இருந்து அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com