உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்திய ரஷியா: 11 பேர் பலி- பலர் காயம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய கடுமையான தாக்குதலில் 11 அப்பாவி பொதுமகள் உயிரிழந்த நிலையில், 53 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன்- ரஷியா போர்
உக்ரைன்- ரஷியா போர்உக்ரைன்- ரஷியா போர்
Published on

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு நாடுகளும் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை ரஷியா டிரோன்கள் மூலம் உக்ரைனின் பல்வேறு இடங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 53 பேர் காயம் அடைந்துள்ளனர். வழிபாட்டு தலம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

புதின், ஜெலன்ஸ்சி உடன் பேசிய டிரம்ப்

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் புதின் தனித்தனியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் டெலிபோனில் பேசினர். அன்றைய தினம் இரவே ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் போரை தொடருவற்கான நோக்கத்தை உலக நாடுகளுக்கு ரஷியா காட்டுகிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com