பிரெஞ்சு உதவியுடன் ரஷிய கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து

வெற்றிகரமான நடவடிக்கை மூலம் ரஷியாவிற்கு மற்றுமொரு இழப்பு ஏற்பட்டுள்ளது என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
Royal Marines capture 244m Russian oil ship in joint French operation
Published on

இங்கிலாந்தின் கால்வாய் வழியாக செல்வதற்கு ரஷியாவின் எண்ணெய் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷியாவின் உஸ்ட் லூகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஸ்மைர்டோஸ் கப்பல், இங்கிலாந்தின் தடைகளை தவிர்ப்பதற்காக அதன் பெயரை மிர்டோஸ் என பெயர்மாற்றம் செய்தது.

ரஷியாவின் ஸ்மைர்டோஸ் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து:

இதையடுத்து இங்கிலாந்து கடற்பரப்பில் முன்னாள் பிரதமர் கேமரூன் கொடியுடன் நுழைந்த ரஷிய நிழல் கப்பலை, பிரிட்டிஷ் பாதுகாப்பு படைகள் இன்று வழிமறித்து கைப்பற்றினர்.

மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் தடைகளை தவிர்ப்பதற்காக, இதுபோன்ற 700-க்கும் மேற்பட்ட கப்பல்களை ரஷியா நம்பியுள்ளது.

இந்நிலையில் ராயல் மரைன் கமாண்டோக்கள் பிரெஞ்சு அதிகாரிகள் உதவியுடன் 244 மீட்டர் நீளமுள்ள ரஷிய கப்பலை 6 மணி நேரம் போராடி கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷியாவிற்கு மற்றுமொரு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வரும் புதினின் நடவடிக்கைக்கு நாங்கள் அனுமதியளிக்கமாட்டோம்” என்று கூறினார்.

இதையடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் சினூக் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கப்பலில் இறங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கப்பலில் உள்ள அறைகளில் அவர்கள் சோதனை நடத்துவதையும், ராணுவ அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்வதையும் கூடுதல் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com