நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்து- ஒருவர் பலி

பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்து- ஒருவர் பலி
Published on

நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

விமானி உள்பட நான்கு பயணிகளுடன் சேர்ந்து நேபாள நிறுவனத்தால் கட்டப்படும், அப்பர் அருண் ஹைட்ரோ திட்டத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பொருட்களை ஹெலிகாப்டர் ஏற்றிச் சென்றது.

ஹெலிகாப்டர் சங்குவாசபா மாவட்டத்தில் உள்ள பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

ஹெலிகாப்டரில் இருந்த மற்ற நால்வரும் கேப்டன் சுரேந்திர பவுடல், பணியாளர்கள் ஷெரிங் போட் மற்றும் மனோஜ் தாபா மற்றும் நேபாள மின்சார ஆணைய ஊழியர் பிக்ரம் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com