பிரதமர் தாயார் மறைவு: பாகிஸ்தான் பிரதமர் அனுதாபம்

தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் தாயார் மறைவு: பாகிஸ்தான் பிரதமர் அனுதாபம்
Published on

இஸ்லாபாத் :

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com