நார்வே பட்டத்து இளவரசி மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!

2 பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நார்வே பட்டத்து இளவரசி மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!
Published on

நார்வே பட்டத்து இளவரசி மெட்டே மாரிட்டின் மூத்த மகன் மேரியஸ் போர்க் (29).

மெட்டே மாரிட் 2001இல் இளவரசர் ஹாகோனை திருமணம் செய்வதற்கு முன்பு, வேறொருவருடன் ஏற்பட்ட உறவின் மூலம் பிறந்தவர்தான் இந்த மேரியஸ் போர்க்.

மேரியஸ் போர்க் மீது 2 பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை கடந்த 6 வாரங்களாக விசாரித்து வந்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வாசித்தது.

இதில் அவர் மீதான 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் கஞ்சா கடத்தியது உள்ளிட்ட இதர 32 குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்து மொத்தம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com