செவ்வாய் விண்கல்லின் உள்ளே இருந்தது என்ன? வாயடைத்து போன விஞ்ஞானிகள்!

எகிப்தியர்கள், ரோமானியர்கள் மற்றும் விக்டோரியன் காலத்தினரிடையே பிரபலமாக இருந்த அடர் சிவப்பு நிற இரத்தினக்கல்லான கார்னெட்டைக் கண்டுபிடித்தனர்.
Mars
Published on

கனடாவில் உள்ள ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இடம்பெற்றுள்ள, NWA 8171 எனப்படும் செவ்வாய் விண்கல்லின் ஒரு சிறிய துண்டை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று பகுப்பாய்வு செய்தது.

இந்நிலையில் வரலாற்றிலேயே முதன்முறையாக, புதிய பாறை வடிவத்தையும் கார்னெட் என்ற கனிமத்தையும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

முன்னதாக வேதியியல் மதிப்பீடுகள் அசாதாரணமாகத் தோன்றியதால் லேசர் கருவிகள் மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உன்னிப்பாக ஆராய்ந்தனர்

இந்நிலையில் பண்டைய எகிப்தியர்கள், ரோமானியர்கள் மற்றும் விக்டோரியன் காலத்தினரிடையே பிரபலமாக இருந்த அடர் சிவப்பு நிற இரத்தினக்கல்லான கார்னெட்டைக் கண்டனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் டார்லிங், இந்தக் கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்தின் புவியியல் குறித்த புதிய பரிமாணத்தை தருகிறது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com