ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கோரிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்: ஆசிய தலைவர்களிடம் மார்கோ ரூபியோ எச்சரிக்கை

மேற்கு ஆசியாவில் மீண்டும் தீவிரமடைந்துள்ள போர் தங்கள் பிராந்தியத்தைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில் ASEAN கவலை தெரிவித்துள்ளது.
Marco Rubio
மார்கோ ரூபியோ
Published on

ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும் என மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல் 10 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் நாங்களும் போரை விரிவுப்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது யார்?

தற்போது கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழியாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பதில்தான் பிரச்சினை நிலவுகிறது. சர்வதேச கடல்சார் சட்டத்தை சுட்டிக்காட்டு, போக்குவரத்து எந்த வித கட்டணம் இல்லைாமலும், தடையில்லாமலும் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

ஆனால், அமெரிக்கா தாக்குதலால் நாங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளோம். இதனை ஈடுசெய்ய ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கம் அமைத்து கட்டணம் வசூலிப்போம் என்று ஈரான் தெரிவித்து வருகிறது.

ASEAN

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உள்ள நாடுகளின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அதில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறுத்துறை செயலாளர் (US Secretary of State) மார்கோ ரூபியோ, ASEAN-ன் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

ASEAN வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் மார்கோ ரூபியோ கூறியதாவது:-

ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும். மேலும் இத்தகைய சூழல் இந்த பிராந்தியம் உட்பட உலகின் பிற பகுதிகளிலும் மீண்டும் நிகழக்கூடும்.

ASEAN அமைப்புடன் துணை நிற்கும் அமெரிக்கா

மேற்கு ஆசியாவில் மீண்டும் தீவிரமடைந்துள்ள போர் தங்கள் பிராந்தியத்தைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் போரில் வாஷிங்டன் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், நாங்கள் 100 சதவீதம் ASEAN அமைப்புடன் துணை நிற்கிறோம்.

இவ்வாறு மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com