கொசோவோ பாராளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசிய பெண் எம்.பி.

பெண் எம்.பி. ஒருவர் பிரதமர் மீது முட்டைகளை வீசியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
முட்டை வீச்சு
முட்டை வீச்சு
Published on

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ நாட்டில் பிரதமராக அல்பின் குர்தி உள்ளார். இந்த நிலையில் கொசோவோ பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் அல்பின் குர்தி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி பெண் எம்.பியான டைம் கத்ரிஜாஜ் வந்தார்.

அவர் திடீரென்று முட்டைகளை பிரதமர் அல்பின் குர்தி மீது சரமாரியாக வீசினார். உடனே பிரதமரை பாதுகாப்பு படையினர் சூழந்து கொண்டனர். கத்ரிஜாஜை பாதுகாப்பு படையினரும், சக எம்.பிக்களும் தடுத்து நிறுத்தினர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

ஜூன் மாதம் நடந்த தேர்தலில் அல்பின் குர்தியின் கட்சி 120 இடங்களில் 53 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து இடைக்கால பிரதமராக அல்பின் குர்தி பொறுப்பேற்றார். இதற்கிடையே புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பது குறித்த ஒப்பந்தத்தை எட்ட கூடுதல் அவகாசம் வழங்குமாறு எம்.பி.க்களிடம் அல்பின் குர்தி கோரியபோது இந்த முட்டை வீச்சு சம்பவம் நடந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com