இஸ்லாமிய 'நேட்டோ'.. இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக காய் நகர்த்திய பாகிஸ்தான் - மெக்கா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இது நேட்டோ அமைப்பின் 'பிரிவு 5' கூட்டுப் பாதுகாப்பு விதியை ஒத்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
மெக்கா ஒப்பந்தம்
மெக்கா ஒப்பந்தம்
Published on

இந்தியா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு நேட்டோ போன்ற போன்ற வலுவான கூட்டணி அத்தியாவசியம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார்.

நேட்டோ

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த நேட்டோ ராணுவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையாக செயல்படுகிறது.

இந்நிலையில் இஸ்லாமிய நேட்டோவை உருவாக்க ஆசிப் அறிவுறுத்தியுள்ளார்.

மெக்கா ஒப்பந்தம்

நேற்று, மெக்காவில் சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.

இது நேட்டோ அமைப்பின் 'பிரிவு 5' கூட்டுப் பாதுகாப்பு விதியை ஒத்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.

ஆசிப்
ஆசிப்

ஆசிப் பேச்சு

இதையடுத்து பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்குப் பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ள கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் இந்திய ஆதரவு அமைப்புகளே (தாலிபான்) பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்துவதால் முஸ்லிம் நாடுகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதே இஸ்லாமிய கொள்கையின் அத்தியாவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கு ஆசியாவில் தொடரும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு ராஜதந்திரத்தை கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான்

இருப்பினும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசுப் கொள்கையாகப் பயன்படுத்துவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏப்பட்ட மோதல் அமைதி ஒப்பந்தம் மூலம் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com