VIDEO: ஹார்முஸ் அருகே எண்ணெய் கப்பலில் விபத்து - 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
VIDEO: ஹார்முஸ் அருகே எண்ணெய் கப்பலில் விபத்து - 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
Published on

லெபனான் விவகாரத்தால் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் நேரடி மோதலில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஓமனின் துக்ம் துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த MT Marivex என்ற எண்ணெய் வணிக கப்பல் நேற்று மதியம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இது அமெரிக்க கடற்படையின் தாக்குதலால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்படுகிறது.

விபத்து நடந்த போது கப்பலில் எண்ணெய் இல்லை, கப்பல் காலியாக இருந்ததால் பெரிய அளவிலான தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. கயிறு கட்டி மாலுமிகள் ஒவ்வொருவராக மீட்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா பேசுகையில், அந்த கப்பலில் இருந்து அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்தோ கூடுதல் விவரங்களை தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com