கத்தாரில் இருந்து LNG ஏற்றிச்சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. ஹார்முஸில் பதற்றம்

உலகின் 2வது பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக கத்தார் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

அமெரிக்கா - ஈரான் இடையே நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் மத்திய கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு முக்கிய ஏற்றுமதி பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரானும் உரிமை கொண்டாடி வருவகால் கப்பல் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் உலகளாவிய நெருக்கடிக்கு வித்திடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றிச் சென்ற கேஸ்லாக் ஷாங்காய் என்ற டேங்கர் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும்போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

தாக்குதல்

கடந்த ஜூலை 27 வாக்கில் கத்தாரில் எல்என்ஜியை நிரப்பிக்கொண்டு புறப்பட்ட நேற்று (ஜூலை 31) ஹார்முஸ் ஜலசந்தியின் வட புற நுழைவு பாதை அருகே கப்பல் சென்றபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமொன்றுக்கு சொந்தமானது இக்கப்பல். கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கப்பலில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஈரானோ, ஏமனின் ஹவுதிக்களோ யாரும் பொறுப்பேற்கவில்லை.

தொடர் தாக்குதல்கள்

இந்த வார தொடக்கத்தில், புதன் அன்று, கேஸ்லாக் நிறுவனத்தினுடைய கேஸ்லாக் சேலம் என்ற மற்றொரு எல்என்ஜி கப்பல் எகிப்து துறைமுகத்தின் வடக்கே Damietta என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கும் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில் கத்தாரை சேர்ந்த எல்என்ஜி டேங்கர் கப்பல் ஹார்முஸில் தாக்குதலுக்கு உள்ளானது. உலகின் 2வது பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளராக கத்தார் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கிய ஏற்றுமதி பாதையாக விளங்கும் செங்கடலின் பாப் அல் மாண்டெப் ஜலசந்தியில் ஏமனை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் கப்பல்கள் அவர்களுக்கு இலக்குகளாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com