கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க மனு

கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்.
கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க மனு
Published on

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். ஆனால் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த குடியுரிமையை அவர் துறந்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. அத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார். இந்த நிலையில் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது வக்கீல்கள் இந்த மனுவை அளித்து உள்ளனர். எனினும் கோத்தபய ராஜபக்சேவின் இந்த மனுவை அமெரிக்க அரசு இன்னும் பரிசீலனைக்கு எடுக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com