பாகிஸ்தானில் பாதாள சாக்கடை கால்வாயில் எரிவாயு விபத்து- 10 பேர் உயிரிழப்பு

பாதாள சாக்கடை கால்வாயில் ஏதோ எரிவாயு தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எரிவாயு விபத்து
எரிவாயு விபத்து
Published on

கராச்சி:

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இன்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. தீப்பிழம்புகள் எழுந்தன. அருகில் உள்ள கட்டிடங்களில் கண்ணாடிகள் உடைந்தன, வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாக்கடை கால்வாயில் ஏதோ எரிவாயு தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் எந்த வகையான வாயு தீப்பிடித்தது, யாராவது பற்ற வைத்தார்களா? என்பது குறித்து தெரியவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். 

நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், பெரும்பாலும் சட்ட விரோதமாக, கான்கிரீட் கட்டமைப்புகளை அமைத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com