இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியா, சீனா உள்ளிட்ட 59 நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்
Published on

அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகள் மீது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், கூடுதலாக இறக்குமதி வரி விதித்தார். இந்த வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்கா உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், வசூலித்த வரியை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா கைவிட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டாய உழைப்பு சட்டத்தை பின்பற்றுவதில் தோல்வியடைந்து விட்டது என்பதை காரணம் காட்டி கூடுதலா 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) பரிந்துரை செய்துள்ளது.

கனடா, மெக்சிகோ, தைவான், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக 10 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுளளது. இந்தியா. சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது.

கட்டாய உழைப்பு இறக்குமதி தடையை அமல்படுத்துவதில் இந்த நாடுகள் தோல்வியடைந்து விட்டது என அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவில் Forced Labour (கட்டாய உழைப்பு) சட்டம் உள்ளது. குழந்தைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவைகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விவாத்திற்கு இந்த பரிந்துரை வைக்கப்பட்டப் பிறகு, இறுதி வடிவம் பெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com