ஈக்வடார் அழகி சுட்டுக்கொலை- மர்ம நபர்கள் தாக்குதல்

ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது. அழகி லாண்டி கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஈக்வடார் அழகி சுட்டுக்கொலை- மர்ம நபர்கள் தாக்குதல்
Published on

குயிட்டோ:

ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பராகா கோய்புரோ (வயது 23).

இவர் 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிடும் ஆக்டோபஸ் செவிச் உணவு பற்றியும், தனது இருப்பிடம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஓட்டலுக்கு 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் 3 முறை குண்டு பாய்ந்ததில் லாண்டி பராகா உயிரிழந்தார். லாண்டி பராகாவுக்கும், போதை பொருள் கும்பல் தலைவன் லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் லியாண்டிரோ நாரிரோ பலியாகிவிட்டார். இதற்கிடையே ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது.

லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து தனது மனைவிக்கு தெரியக் கூடாது என்று கடத்தல்காரர் லியாண்டிரோ நாரிரோ நினைத்ததாகவும், தனது கணக்காளரிடம் தொலை பேசியில் பேசும்போது , லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து எனது மனைவிக்கு தெரிந்து விட்டால் பிரச்சினை ஆகி விடும் என்று அவர் கூறி பயந்ததாகவும் கோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

இதனால் அழகி லாண்டி பராகா கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com