திபெத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

அதிகாலை 2:41 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.இதன்போது நில அதிர்வானது உணரப்பட்டது.
திபெத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
Published on

இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 2:41 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன்போது நில அதிர்வானது உணரப்பட்டது.

இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை. முன்னதாக மே 8 ஆம் தேதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com