நேபாள அதிபர் மற்றும் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார். நேபாள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
நேபாள அதிபர் மற்றும் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

இரண்டு நாள் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடெல் மற்றும் பிரதமர் புஷ்ப கலம் தாஹல் ஆகியோரை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com