London: இந்தியாவில் கருத்து சுதந்திரம் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சை இடைமறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் சலசலப்பு

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இச்சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
London: இந்தியாவில் கருத்து சுதந்திரம் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சை இடைமறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் சலசலப்பு
Published on

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரிக்பெக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்துகொண்டு 'செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சூர்யகாந்த் தனது உரையை முடித்ததைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடனான கேள்வி-பதில் அமர்வு தொடங்கியது.

சூர்யகாந்த் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரங்கில் இருந்த சிலர் திடீரென கூச்சலிட்டு இடையூறு விளைவித்த சிலர் இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்தியாவில் மாற்றுக்கருத்துடையவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறி தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர்.

இருப்பினும், அவர்கள் எழுப்பிய கேள்விகள் கருத்தரங்கின் தலைப்புடன் தொடர்புடையவை அல்ல என்று கூறி, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடனடியாக தலையிட்டு அவர்களது மைக்கை கட் செய்தனர்.

இதனால் அரங்கிற்குள் சிறிது நேரம் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இச்சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், "ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால், அவற்றை நாகரீகமான மற்றும் மரியாதையான முறையில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.

அதை விடுத்து, இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சூர்யகாந்த், நாட்டின் இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையை எடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதற்கு இளைஞர்களின் ஆதரவு பெறுகிறது. அக்கட்சி, நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com