

பிரேசிலில் சாவோ பாலோவின் லிமெய்ரா என்ற இடத்தில் பஞ்சி ஜம்ப் சாகச விளையாட்டின் போது 21 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்த சோகமான விபத்து நடந்தது.
சுமார் 130 அடி உயரத்தில் இருந்து பஞ்சி ஜம்ப் செய்யும் விளையாட்டில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். அப்போது தேவையான பாதுகாப்புக் கயிற்றை இணைக்காமலேயே பாலத்திலிருந்து கீழே வீசப்பட்டார்.
இந்நிலையில் அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளில், அத்தியாவசியமான பாதுகாப்பு கயிறு இணைக்கப்படவில்லை என்பதை அறியாமலே பணியாளர்கள் அந்தப் பெண்ணை பாலத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று விடுவிப்பது தெரியவந்தது.
பாதுகாப்புக் குறைபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய, அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பெண் உள்ளூரைச் சேர்ந்த மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீடாஸ் என அடையாளம் காணப்பட்டார். மேலும் அவரது உடல் மேல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.