ஷேக் ஹசீனா நேர்காணலை தொடர்ந்து ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

கருத்தரங்கில் உரையாற்றிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
shakib al hasan
Published on

வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் அவாமி லீக் எம்.பி.யுமான ஷகிப் அல் ஹசன் மூதாதையர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, ஷகிப் அல் ஹசன் மூதாதையர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 8:45 மணியளவில், மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் உள்ள ஷகிப் அல் ஹசனின் மூதாதையர் இல்லத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் அந்த வீடும் சேதப்படுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் மன்றத்தில் ஷேக் ஹசீனா ஏற்பாடு செய்திருந்த காணொளிக் கருத்தரங்கில் உரையாற்றிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவாமி லீக் அறிக்கை:

"வீடுகளுக்குத் தீ வைப்பது: அவாமி லீக் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான விலை. நவ பாசிசம் வங்கதேசத்தை சூழ்ந்துள்ளது," என்று அவாமி லீக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாண்புமிகு கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் உலக புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, வங்கதேசத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான அவரது இல்லத்தில் ஒரு கொடூரமான பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, பி.என்.பி, இஸ்லாமிய ஜமாத் மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள், செய்தியாளர் சந்திப்புகள் குறித்த செய்திகள் வெளியானால், வழக்கு தொடர நீதித்துறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோம் என்று தேசிய ஊடகங்களை பகிரங்கமாக அச்சுறுத்தின. இந்த திட்டமிட்ட தாக்குதல், ஜனநாயக கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் அவ்மாய் லீக் ஆர்வலர்களுக்கு எதிராக தொடரும் இனப்படுகொலை பிரச்சாரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்; இது பாசிசத்தின் அடையாள சின்னம்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

உறுதி:

காணொளி வாயிலாக பேசிய ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று தான் விவரித்ததில், கைது அல்லது மரணத்தை கூட எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறி, டிசம்பரில் வங்கதேசத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com