நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து தாக்குதல்- 10 அப்பாவி மக்கள் பலி

பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தவறுதலாக நடத்திய தாக்குதலால் 10 பேரும் இறந்ததாக நைஜீரியா ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து தாக்குதல்- 10 அப்பாவி மக்கள் பலி
Published on

மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் அமைந்துள்ளது நைஜீரியா. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இவர்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிர் இழந்து வருகின்றனர். பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியா சொகுடா மாகாணம் சிமிலி என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.

ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் இறந்து விட்டனர். கிளர்ச்சியாளர்கள் குழு என நினைத்து தவறுதலாக நடத்திய தாக்குதலால் 10 பேரும் இறந்ததாக நைஜீரியா ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com