272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த நபர் மரணமடைந்தார்

இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார்போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்
272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த நபர் மரணமடைந்தார்
Published on

அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கினார். இதனையடுத்து சுவாசிக்க முடியாமல் அவர் சிரமப்பட, டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அவசர மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் 600 பவுண்டுகள் (272 கிலோ கிராம்) எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். பின்பு வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

இப்படி 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் நேற்று (மார்ச் 12) உயிரிழந்துள்ளார். இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவர், கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞராக மாறினார். பின்னர் எழுத்தாளராக ஆனார். இவரின் கதை உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்தது.

பால் அலெக்சாண்டர் இறப்பு குறித்து பேசிய அவரது சகோதரர் பிலிப், "எனது சகோதரரின் நிதி திரட்டலுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது அவரது கடைசி சில வருடங்களை மன அழுத்தமின்றி வாழ அனுமதித்தது" என தெரிவித்துள்ளார்.

போலியோ வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுகிறது. போலியோ ஒரு நபரின் முதுகுத் தண்டுவடத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

X

Maalai Malar
www.maalaimalar.com