மதுரையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே வாலிபர் அடித்துக்கொலை

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

மதுரை:

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சர்வேயர் காலனி பகுதியில் இருக்கிறது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் கடை ஒன்றின் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருப்பாலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். பிணமாக கிடந்த வாலிபரின் தலைப்பகுதியில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மதுரை கே.புதூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஆனந்த் (வயது 26) என்பது தெரியவந்தது. கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவரை யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை.

ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்பு ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனந்துக்கும், வேறு யாருக்கும் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக அவரை அந்த நபர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க கொலை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது இன்று அதிகாலை நேரத்தில் கொலை நடந்த பகுதியில் ஆனந்த் மற்றும் சிலர் நடந்து வந்ததும், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டதும், அப்போது அந்த நபர்கள் ஆனந்தை அடித்து கொலை செய்த காட்சிகளும் பதிவாகியிருந்தன.

அவரை அடித்துக் கொன்ற கொலையாளிகளின் முகம் வீடியோவில் ஓரளவுக்கு தெரிகிறது. அதனைக்கொண்டு ஆனந்தை அடித்து கொன்ற நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எதிரே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநகர போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்த னர்.

அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடல் மற்றும் கொலை நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே நடந்த கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com