சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம் செய்த வாலிபர்கள்

இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம் செய்த வாலிபர்கள்
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com