வத்தலக்குண்டு அருகே வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
பிரகாஷ்.
பிரகாஷ்.
Published on

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு தெப்பத்துப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மனைவி சரஸ்வதி(34). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் குருவித்துறையை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் சரஸ்வதியிடம் தான் முருக்கு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், அங்கு வந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. தனது மனைவியை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது கணவர் தங்கபாண்டி இதுகுறித்து விருவீடு போலீசில் புகார் அளித்தார். சரஸ்வதியை பிரகாஷ்தான் கடத்தி சென்றிருக்கக்கூடும் என்றும், இதற்கு உடந்தையாக அவரது உறவினர்கள் அன்னக்களி, பாண்டி, தெப்பத்துப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர், அவரது மனைவி பொன்மணி ஆகியோர் உள்ளனர் என்றும், தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனைவியை மீட்டுத்தரும் வரை தான் செல்லமாட்டேன் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com