யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை காவல்

இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை காவல்
Published on

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார்.

தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு யூ டியூபர் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com