மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெக கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!

புதிதாக வடிவமைக்கப்படும் பேருந்துகளும் நிற மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெகவின் கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!
Published on

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளன.

செயலி மட்டுமின்றி, தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறத்தையும் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நிறங்களைத் தாண்டி, கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களையும் தவெக அரசு மாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com