திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சித்ரவதை: பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார்.திமுக எம்.எல்.ஏ. வீட்டில் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சித்ரவதை: பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
Published on

சென்னை:

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு 7 பேர் கொண்ட மருத்துவ குழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம்பெண்ணிடம் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. வீட்டிலும் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com