மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டம்- 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார்

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டம்- 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார்
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com