மங்கலம்பேட்டை அருகே காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மங்கலம்பேட்டை அருகே காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
Published on

மங்கலம்பேட்டை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் ஊராட்சியின் புதுக் காலனி மற்றும் பழைய காலனியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனார்.

இங்கு குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வருவதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

இதனால் பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கி அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எம். அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் முன் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com