தவறான நோக்கத்துடன் அணுகினார்.. ஓ.பி.எஸ். மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண்

நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
தவறான நோக்கத்துடன் அணுகினார்.. ஓ.பி.எஸ். மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண்
Published on

சென்னை:

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக அவர் தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.

தனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி உறுதி அளித்திருப்பதாக கூறினார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திப்பேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com