கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைக்குமா? 20ம் தேதி விசாரணை

சவுக்கு சங்கரை கோவை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைக்குமா? 20ம் தேதி விசாரணை
Published on

சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com