கூடலூர் அருகே சோதனை சாவடி பகுதியில் உலா வந்த காட்டு யானை

வாகன ஓட்டிகள் யானையை கண்டு வாகனங்களை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி காத்திருந்தனர்.
காட்டு யானை
Published on

காட்டு யானை சாலையில் சர்வ சாதாரணமாக நடந்த சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல் சோதனைச்சாவடி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அமைதியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டு வாகனங்களை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி காத்திருந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் இந்த காட்சியை பதிவு செய்தனர்.

வாகன ஓட்டிகள் அச்சம்

சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை, பின்னர் தானாகவே அருகிலுள்ள வனப்பகுதிக்குள் திரும்பிச்

சென்றது. இதனால் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காட்டு யானை சாலையில் சர்வ சாதாரணமாக நடந்த சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

வனத்துறை அறிவுறுத்தல்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வனப்பகுதியைஒட்டிய சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், காட்டு யானைகள் தென்பட்டால் அவற்றை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ, புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கவோ கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com