ஓமன் நாட்டு கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனைவி தர்ணா

விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஓமன் நாட்டு கப்பல் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டு தரவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனைவி தர்ணா
Published on

கடலூர்:

துபாயில் உள்ள துறைமுகத்தில் இருந்து சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்த விபத்தில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 16 பேர் சிக்கினர்.

அவர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் மாயமான தனஞ்செயனை மீட்டுத்தரக்கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி எழிலரசி (வயது 31) குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மனு அளித்தார். ஆனால் அந்த மனு தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வந்த எழிலரசி, விபத்தில் சிக்கி மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, விபத்து நடந்து 6 நாட்கள் ஆகியும் எனது கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது கணவரை மீட்டுத்தர அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது அங்கு வந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகர், கடலூர் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனை ஏற்று எழிலரசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com