வெள்ளையனை வெளியேற்றினோம்... கொள்ளையர்களை வெளியேற்றுவோம்- கவியரங்கில் பா.வளர்மதி பேச்சு

கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம்.
வெள்ளையனை வெளியேற்றினோம்... கொள்ளையர்களை வெளியேற்றுவோம்- கவியரங்கில் பா.வளர்மதி பேச்சு
Published on

அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர் முத்துலிங்கம் உள்பட கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.

கவியரங்கை தொடங்கி வைத்து பா.வளர்மதி பேசியதாவது:-

இந்த உணர்ச்சிமிகு எழுச்சி மாநாட்டை நடத்த ஆகஸ்டு மாதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

இதே ஆகஸ்டு மாதத்தில் தான் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். இதே ஆகஸ்டு மாதத்தில் தான் வெள்ளையனை வெளியேற்றி சுதந்திரம் பெற்றோம்.

இப்போது கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது. இதே உணர்ச்சி யோடும், எழுச்சியோடும் இந்த முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com