த.வெ.க மாநாடு வெற்றிப்பெற சாய்பாபா கோவிலில் விஜய்யின் பெற்றோர் சிறப்பு வழிபாடு

தவெக மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
த.வெ.க மாநாடு வெற்றிப்பெற சாய்பாபா கோவிலில் விஜய்யின் பெற்றோர் சிறப்பு வழிபாடு
Published on

தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெற்றிப்பெற வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்யின் சொந்த கோவிலான கொரட்டூர் சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com