கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

ஆலையில் சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
CM Vijay inspects reviews Chennai Sewage Plant
Published on

கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்பு சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் ஆகிய இடங்களில் திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.

நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிந்தார்.

ஏற்கனவே நான்கு இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தற்போது தொழில்துறை தேவைக்கு வழங்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த சுத்திகரிப்பு ஆலையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கொள்ளளவு செயல்பாட்டில் உள்ளது.

இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், அந்த நீரை கொண்டு வாகனங்கள் மற்றும் ரெயில் பெட்டிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com