வேளாங்கண்ணி திருவிழா, வார விடுமுறை- தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள்

இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா, வார விடுமுறை- தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முகூர்த்த நாள், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com