

வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது. இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. எனினும் நாளை ஆடி கிருத்திகை என்பதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறையவில்லை. இதனால் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் காய்கறி விற்பனை விறுவிறுப்பாகவே நடந்தது.
வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் கேரட் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி-ரூ.8முதல் ரூ.16 வரை, நாசிக் வெங்காயம்-ரூ.28 முதல் ரூ.36வரை, சின்ன வெங்காயம்- ரூ.50முதல் ரூ.75வரை, உருளைக்கிழங்கு-ரூ.16, கத்தரிக்காய் -ரூ.30, வெண்டைக்காய்-ரூ.40, அவரைக்காய் -ரூ.40,ஊட்டி பீட்ரூட் -ரூ.60, முருங்கைக்காய்-ரூ.35, பீர்க்கங்காய்-ரூ.40, பன்னீர் பாகற்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.40, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.17, சவ்சவ் -ரூ.10, சுரக்காய்-ரூ.10, புடலங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்- ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.35, இஞ்சி-ரூ.75முதல் ரூ.150வரை.