‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது.
‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!
Published on

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இல்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே இதில் திமுகவின் நிலைப்பாடு என்னவென தெரிவித்துவிட்டதாகவும், மசோதாவே தாக்கலாகாதபோது ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஃப்சிஆர்ஏ மசோதா தொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்.,

“நாங்கள் எஃப்சிஆர்ஏ-வை எதிர்க்கிறோம். ஏனெனில், அதில் உள்ள பெரும்பாலான விதிகள் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரானவை. இதுதொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. திமுக இந்த மசோதாவை எதிர்ப்பதுடன், இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.” என்றார்.

தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தவெக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்.,

“திமுக அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை கூட்டி எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருந்தது.

நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டால் அதை எதிர்ப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். அந்த மசோதா வந்தபோது அதற்கு எதிராக வாக்களித்தோம், அது தோல்வியடைந்தது. பாஜக சந்தித்த முதல் தோல்வி அதுதான் என்று நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில், வரவிருக்கும் கூட்டத்தொடர் நாட்களில் அரசு இந்த மசோதாவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை; அதைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இல்லை.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com