

உடையாபட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்ைட, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டிதாதனூர், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மேட்டுப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.